மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், படகுகளை விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டு கொண்டார்.
பதிவு: 20 Dec 2021, 11:06:02 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.12.2021) ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.எஸ்.ஜெய்சங்கர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
மேலும் இன்று (19.12.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் பாதுப்புடன் திருப்பி அனுப்பி வைக்க தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.