New - DetailPage - DMK
header_right
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 34ஆவது பட்டமளிப்பு விழாவில்,மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பட்டப்படிப்பு முடித்த மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பதிவு: 20 Dec 2021, 14:47:46 மணி

தனது நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்!
திராவிட இயக்கத் தலைவர்களான அவர்கள் சமூகத்தில் புரையோடிப்போன பிணிகளைப் போக்கப் பாடுபட்ட மருத்துவர்கள்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினேன்.
கிராமப்புறங்களில் மருத்துவச் சேவையாற்றி மக்கள் மருத்துவர்கள் என்று அவர்கள் பெயரெடுக்க வேண்டும் என்பதை என் கோரிக்கையாக வைத்தேன்.