கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், கடலூர் மேற்கு மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த விருத்தாசலம் ஒன்றிய பெருந்தலைவர் க.செல்லதுரை, க.இளமங்கலம், ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.கணபதி, எம்.பரூர் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
பதிவு: 27 Dec 2021, 10:18:05 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கடலூர் மேற்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
விருத்தாசலம் ஒன்றிய பெருந்தலைவர் க.செல்லதுரை க.இளமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.கணபதி,
எம்.பரூர் கிளைச் செயலாளர் கே.நெடுஞ்செழியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (25.12.2021) காலை, கடலூர் மேற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த விருத்தாசலம் ஒன்றிய பெருந்தலைவர் க.செல்லதுரை, க.இளமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கணபதி, எம்.பரூர் கிளைச் செயலாளர் கே.நெடுஞ்செழியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு அமைச்சரும் - கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான சி.வெ.கணேசன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், ஒன்றியச் செயலாளர் கனக கோவிந்தசாமி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிவேல், மாவட்ட கவுன்சிலர் சாமி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
***