கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூரிலுள்ள கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தார்.
பதிவு: 30 Dec 2021, 10:45:20 மணி
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூரிலுள்ள திராவிட முன்னேற்றக் கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தார். உடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. க. பொன்முடி, மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ். விஜயன், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.