மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் #NEET தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டப் போராட்டத்தினை ஒன்றிணைந்து மேற்கொள்வதென முடிவு
பதிவு: 08 Jan 2022, 17:54:51 மணி
சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையிலும்; மக்களாட்சித் தத்துவத்துக்கும் சட்டமன்ற இறையாண்மைக்கும் எதிராகவும் உள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிற மாநிலங்களும் நீட் தேர்வின் பாதகங்களை உணரும் வகையில் ஒருமித்த கருத்து ஏற்படுத்திடவும்; நீட் தேர்வினை நீக்கிட ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதென்றும் முடிவுசெய்யப்பட்டது.
மேலும், ஏற்கனவே ஒன்றிய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாகப் பரிசீலிக்க அவரிடம் இருந்து அழைப்பு வரப்பெற்றால் அவரைச் சந்திக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.