வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளைச் சரிசெய்யும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன்.
பதிவு: 17 Jan 2022, 10:50:03 மணி
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளைச் சரிசெய்யும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன்.
இதன்படி சென்னை மாநகராட்சியில் 312 கி.மீ. - பிற மாநகராட்சிகள் & நகராட்சிகளில் 1675 கி.மீ. - பேரூராட்சிகளில் 1110 கி.மீ. - ஊராட்சிகளில் 650 கி.மீ. நீளமுள்ள பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் உள்ள வாரன்ஸ் சாலையிலும், மகாலிங்கபுரத்திலும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தற்போது நேரடியாகச் சென்று பார்வையிட்டேன்.
அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தப் பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளேன்.