New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னிலையில் கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் திரு.கே.சி.கே.விஜயகுமார் அவர்கள் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.

பதிவு: 25 Jan 2022, 10:54:36 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
கோவை மாவட்டம்,
அன்னூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர்  கே.சி.கே.விஜயகுமார் அவர்கள் தலைமையில்
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த
அன்னூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள்
தி.மு.க.வில் இணைந்தனர்
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (24.1.2022) மாலை,  கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் கே.சி.கே.விஜயகுமார்  தலைமையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அன்னூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்களான 10வது வார்டு இ.கனகராஜ், 9வது வார்டு நா.ரங்கநாதன், 14வது வார்டு ஏ.சந்திரசேகரன் 1வது வார்டு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, 4வது வார்டு கே.விஜயகுமார், சங்கர் மற்றும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் மாநில முன்னாள் செயற்குழு உறுப்பினர் அம்பாள் நந்தகுமார், ஆகியோர் தி.மு..வில் இணைந்தனர்.
 
அதுபோது கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி, ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மாண்புமிகு எ.வ.வேலு, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை,   தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன்,   ஆகியோர் உடனிருந்தனர்.
***