வெளிநாடு வாழ் தமிழர்கள் இந்திய நலச்சங்கத்தின் அமீரகத் தலைவர் மீரான் அவர்களின் தீவிர முயற்சியால் குவைத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு மீட்கப்பட்ட நாமக்கல் கலைச்செல்வி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
பதிவு: 16 Feb 2022, 12:05:02 மணி
வெளிநாடு வாழ் தமிழர்கள் இந்திய நலச்சங்கத்தின் அமீரகத் தலைவர் மீரான் அவர்களின் தீவிர முயற்சியால்
குவைத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு
மீட்கப்பட்ட நாமக்கல் கலைச்செல்வி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை
நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நாமக்கல்லைச் சேர்ந்த திருமணி என்பவரின் மகள் கலைச்செல்வி கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். கொரோனா பரவலைத் தொடர்ந்து, தொழில் சரிவர நடைபெறாமல் கடுமையான பொருளாதார பிரச்சனை ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி, வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தபோது, குவைத்தில் இருக்கும் சபீக் என்பவர், குவைத்தில் வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறி, டூரிஸ்ட் விசாவில் துபாய் அழைத்துச் சென்று, ஏமாற்றப்பட்டு, மிகுந்த துயரத்துக்குள்ளான கலைச்செல்வி மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவாணனன் மற்றும் திமுக அயலக அணி இணைச் செயலாளர் டாக்டர் யாழினி ஆகியோரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்,
வெளிநாடு வாழ் தமிழர்கள் இந்திய நலச்சங்கத்தின் அமீரகத் தலைவர் மீரான் அவர்கள், கலைச்செல்வி அவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அவரது பாஸ்போர்ட்டைப் பெற்று, தனது சொந்த செலவில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார். இதற்கு அமீரகத்தைச் சேர்ந்த முஷ்டாக் அகமது, முஸ்தபா, செந்தில் பிரபு, மணிமொழியன், செந்தில், பவர் கஜினி முகமது உள்ளிட்டோரும் உதவி புரிந்தனர்.
அவ்வாறு வெளிநாடு வாழ் தமிழர்கள் இந்திய நலச்சங்கத்தின் அமீரகத் தலைவர் திரு. மீரான் அவர்களின் தீவிர முயற்சியால் குவைத்தில் வேலை வாங்கித் தருவாக ஏமாற்றப்பட்டு மீட்கப்பட்ட நாமக்கல் கலைச்செல்வி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (15.2.2022) மாலை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அதுபோது கழக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் உடனிருந்தனர்.
***