கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும்; முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
பதிவு: 23 Feb 2022, 11:18:28 மணி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (22-02-2022) மாலை - சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும்; முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்துக்கும்; இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் இல்லத்துக்கும் சென்று அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், கழக முன்னாள் பொருளாளரும் உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான திரு. ஆர்க்காடு வீராசாமி அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்துக் கழகத்தின் வெற்றிக்கு வாழ்த்து பெற்றார்.