உடன்பிறப்புகளின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் காணும்போது கால் வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது. விடியலில் முளைத்த சூரியக் கதிர்களை வாழ்த்தினேன்.
பதிவு: 24 Feb 2022, 11:01:40 மணி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை - அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்தம் உறவினர்கள் மற்றும் அவர்களது வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் ஆகியோரையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு வாழ்த்தினார்.
இதுகுறித்து மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் பகிர்ந்துகொண்ட சமூக வலைத்தள பதிவு பின்வருமாறு:
முப்பதுக்கும் மேற்பட்ட கழக மாவட்டங்களைச் சேர்ந்த வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள்- அவர்களது குடும்பத்தினர், வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் என ஆயிரக்கணக்கானோர் என்னைச் சந்தித்து வெற்றிக் களிப்பைப் பகிர்ந்துகொண்டனர்.
உடன்பிறப்புகளின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் காணும்போது கால் வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது.
விடியலில் முளைத்த சூரியக் கதிர்களை வாழ்த்தினேன்.