New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் திருப்பூர் மத்திய மாவட்டம், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பூர் மாநகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் திருமதி வேலம்மாள் தி.மு.க.வில் இணைந்தார். 

பதிவு: 26 Feb 2022, 10:29:52 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருப்பூர் மத்திய மாவட்டம்,
சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற
திருப்பூர் மாநகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் திருமதி வேலம்மாள்
தி.மு.க.வில் இணைந்தார்
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,   இன்று (25.2.2022) காலை, நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திருப்பூர் மத்திய மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி 8 வார்டில், சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் திருமதி வேலம்மாள் தி.மு.கவில் இணைந்தார்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மை செயலாளர் மாண்புமிகு கே.என். நேரு, துணை பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, திருப்பூர் மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திருப்பூர் க.செல்வராஜ், எம்.எல்.ஏ., மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மடத்துக்குளம் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
***