கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை தெற்கு மாவட்டம், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி 108வது வார்டு கவுன்சிலரும் - அ.தி.மு.க. கட்சியின் மாவட்ட பொருளாளருமான லியோ சுந்தரம் தி.மு.க.வில் இணைந்தார்.
பதிவு: 26 Feb 2022, 10:30:25 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
சென்னை தெற்கு மாவட்டம்,
சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற
சென்னை மாநகராட்சி 108வது வார்டு கவுன்சிலரும் -
அ.தி.மு.க. கட்சியின் மாவட்ட பொருளாளருமான லியோ சுந்தரம்
தி.மு.க.வில் இணைந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (25.2.2022) காலை, நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சென்னை தெற்கு மாவட்டம், சென்னை மாநகராட்சி 108 வார்டில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலரும் - அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொருளாளருமான லியோ சுந்தரம் தி.மு.கவில் இணைந்தார்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மை செயலாளர் மாண்புமிகு கே.என். நேரு, துணை பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும் - மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்ரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
***