திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து
பதிவு: 14 Dec 2020, 12:22:16 மணி
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது 88-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து தனது பிறந்தநாள் 02-12-2020 அன்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அதுபோது கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் திரு.கே.என்.நேரு எம்.எல்.ஏ., கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ., திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு. வீ.அன்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.