கழகத்தலைவர் அவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் திரு.தினேஷ் குண்டுராவ், MLA. அவர்கள் சந்திப்பு.
பதிவு: 14 Dec 2020, 13:19:20 மணி
கழகத் தலைவர் அவர்களை, 2.12.2020 இன்று, மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், எம்.எல்.ஏ., மரியாதை நிமித்தமாய் சந்தித்தார்.
உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ., கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.