கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் - மாவட்ட முன்னாள் செயலாளர் கழகத்தில் இணைந்தார்.
பதிவு: 22 Dec 2020, 16:03:38 மணி
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று (21.12.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும் - மாவட்ட முன்னாள் செயலாளருமான டாக்டர் கணபதி ராஜ்குமார் தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கோவை கார்த்திக், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.