கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் பா.ஜ.க. மாநில மருத்துவ அணி முன்னாள் தலைவரும் - அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மகாஜன சங்க (DECORUM) நிறுவனர் கழகத்தில் இணைந்தார்.
பதிவு: 22 Dec 2020, 16:09:42 மணி
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று (21.12.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், பா.ஜ.க. கட்சியின் மாநில மருத்துவ அணி முன்னாள் தலைவரும் - அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மகாஜன சங்க (DECORUM) நிறுவனருமான டாக்டர் டி.கயிலைராஜன் அவர்கள் தலைமையில், பா.ஜ.க.வைச் மாநில விவசாய அணி துணை முன்னாள் செயலாளர் ஏ.ஜி.கலாநிதி, இந்தியன் வங்கி சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வ தியாகராஜன் மற்றும் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மகாஜன சங்கத்தை(DECORUM)ச் சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவஞானம், வடமதுரையைச் சேர்ந்த முருகேசன், பூமிநாதன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டம்பட்டி பி.பெருமாள், இலந்தம்பட்டியைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.கருத்தபாண்டி, ஆர்.ராமசுப்பு, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வடமலகுறிச்சி ஏ.செல்வம், கோமிங்கபட்டி ஏ.செல்வபாண்டி, ஆர்.தங்கமாரி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சீலியம்பட்டி ஜி.ரவீந்திரபாண்டியன், முத்துலாபுரம் எம்.ரஞ்சித், எரசக்கநாயக்கனர் கே.சின்னகருப்பையா, சின்னமனூர் எஸ்.செல்வகுமார், சீலியம்பட்டி ஏ.ராஜசேகர், எஸ்.சுருளியப்பன் ஆகியோரும் மதுரை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த பகுதி மீனவர் அணிச் செயலாளர் பி.திருஞானசம்பந்தம் தலைமையில், தே.மு.தி.க.வைச் சேர்ந்த பகுதி இளைஞர் அணி முன்னாள் செயலாளர் எம்.கார்த்திகை ராஜா, 24வது வட்ட முன்னாள் செயலாளர் கே.வெள்ளத்துரை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.அலாவுதீன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது பொதுச்செயலாளர் துரைமுருகன், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, எம்.எல்.ஏ., கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.வெங்கடேஷ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஏ.மருதுபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.