கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்டம் அ.ம.மு.க. கட்சியின் மாவட்ட இலக்கிய அணி தலைவர், ஊராட்சி தலைவர்கள் கழகத்தில் இணைந்தனர்.
பதிவு: 22 Dec 2020, 16:14:11 மணி
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று (21.12.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இராமநாதபுரம் மாவட்டம், அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த மாவட்ட இலக்கிய அணி தலைவரும் - தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கி தலைவருமான மு.கிருஷ்ணன் - அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவாடானை ஒன்றிய து.விஸ்வநாதன், கோடனூர் ஊராட்சிமன்ற தலைவர் த.காந்தி - பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.சேகர் மற்றும் ராமநாதன், கலைச்செல்வி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது பொதுச்செயலாளர் துரைமுருகன், இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.