கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இளம் கால்பந்தாட்ட வீரர் சுந்தரமூர்த்தி, ஸ்பெயின் சென்று விளையாடத் தேவையான காசோலையையும், விசா மற்றும் டிக்கெட், காலணி, ஜெர்ஸி உள்ளிட்டவற்றையும் வழங்கி வாழ்த்தினார்.
பதிவு: 22 Dec 2020, 16:24:25 மணி
ஸ்பெயின் நாட்டின் சர்வதேச கால்பந்து கிளப்பான "ஏடி ஆல்க்ரானில்" விளையாட வாய்ப்புக் கிடைத்தும், வறுமை காரணமாக, ஸ்பெயின் சென்று விளையாட முடியாமல் தவித்து வந்த சென்னையைச் சேர்ந்த இளம் கால்பந்தாட்ட வீரர் சுந்தரமூர்த்தி, ஸ்பெயின் சென்று விளையாடத் தேவையான முழுச் செலவையும் கழக மருத்துவ அணியின் இணைச் செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இன்று, (21-12-2020) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதற்கான காசோலையையும், விசா மற்றும் டிக்கெட், காலணி, ஜெர்ஸி உள்ளிட்டவற்றையும் வழங்கி வாழ்த்துக் கூறினார்.
அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., டாக்டர் சுபேர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.