New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பத்திரிகைச் செய்தி - 24.12.2020

பதிவு: 26 Dec 2020, 12:01:40 மணி

கழக மகளிரணித் துணைச் செயலாளர் கவிஞர் சல்மா அவர்கள் எழுதிய "மனாமியங்கள்" எனும் நூல், மீனா கந்தசாமி அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தில், 'வுமன் ட்ரீமிங்' எனும் பெயரில் "பென்குயின்" பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலினை, இன்று (24-12-2020), சென்னை - அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட,  பிரபல  கருநாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பெற்றுக் கொண்டார். 

அதுபோது, பத்திரிகையாளர் அரவிந்தன் உடனிருந்தார்.

மேலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., கழக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., ஆகியோரும் உடனிருந்தார்கள்.