கழகத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் (CPS) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி, பணிபுரியும் காலத்திலேயே உயிர்நீத்த பொறுப்பாளர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கினார்.
பதிவு: 29 Dec 2020, 17:57:28 மணி
கழகத் தலைவர் அவர்கள், இன்று (27.12.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில், (CPS) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி, பணிபுரியும் காலத்திலேயே உயிர்நீத்த பொறுப்பாளர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கினார்.
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.இராசா, அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.