New - DetailPage - DMK
header_right
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் திரு.ஆர்.முத்தரசன் அவர்களும் இன்று (5-3-2021), தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்தாய்வு

பதிவு: 06 Mar 2021, 10:14:37 மணி

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்,  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர்  திரு.ஆர்.முத்தரசன் அவர்களும் இன்று (5-3-2021), தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி, தமிழகத்தில் 6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்புராயன், மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் கோ.பழனிசாமி   - கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,  துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.