திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களும் இன்று (7-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்தாய்வு
பதிவு: 07 Mar 2021, 10:36:36 மணி
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களும் இன்று (7-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 25 (இருபத்தைந்து) சட்டமன்றத் தொகுதிகளிலும் - கன்னியாகுமரி (இடைத்தேர்தல்) நாடாளுமன்றத் தொகுதியும் பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் (தமிழகப் பொறுப்பு) திரு. தினேஷ் குண்டுராவ், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர்.ராமசாமி - கழகப் மகளிர் அணிச் செயலாளரும் - கழக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.